தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து, குஜராத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இந்த திருத்த நடவடிக்கையில், வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது.
அதாவது, குஜராத்தில் மட்டும் சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் (73.73 லட்சம் – 14.50%) வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு முன்பு, குஜராத்தில் 5 கோடி 8 லட்சத்து 43 ஆயிரத்து 436 வாக்காளர்கள் பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய வரைவு பட்டியலில் 4 கோடி 43 லட்சத்து 70 ஆயிரத்து 109 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
நீக்கப்பட்ட வாக்காளர்களில்,
இறந்தவர்கள் – 18.07 லட்சம்,
இருப்பிடம் தெரியாதவர்கள் – 9.69 லட்சம்,
நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் – 40.25 லட்சம்,
இரண்டு இடங்களில் பதிவு செய்திருந்தவர்கள் – 3.81 லட்சம் பேர் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு திருத்தத்தின் மூலம், போலி பதிவுகள் மற்றும் தவறான பெயர்கள் நீக்கப்பட்டு, குஜராத் மாநில வாக்காளர் பட்டியல் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி ஹரீத் சுக்லா தெரிவித்துள்ளார்.ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்காளர் பட்டியலை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக இந்த திருத்தம் பார்க்கப்படுகிறது.