பெண் நிர்வாகியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்பட்ட தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 18ம் தேதி ஈரோடு அருகே பெருந்துறையில் நடந்த விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவில் திருச்செங்கோடு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

வழியில் கூட்டப்பள்ளியில் உள்ள மாவட்ட மகளிரணி நிர்வாகி வீட்டருகே காரை நிறுத்திவிட்டு, அவர் வீட்டுக்குச் சென்று தங்கியதாக தகவல் வெளியானது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவை தட்டியபோது, உள்ளே இருந்த செந்தில்நாதன் அரைகுறை ஆடையில் பிடிபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில் அந்த பெண்ணும் வீடியோ வெளியிட்டு, கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறினார். இதையடுத்து கட்சி மானம் கருதி உடனடி நடவடிக்கையாக செந்தில்நாதன் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!