நண்பர்களுடன் விருந்துக்காக சென்ற மாணவி… கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை… அதிர்ச்சி சம்பவம்..!!!
SeithiSolai Tamil December 22, 2025 06:48 PM

பெங்களூருவில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த பி.யூ.சி. இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், தனது நண்பர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலகங்கா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வரும் அந்த மாணவி, கடந்த சனிக்கிழமை இரவு தனது நண்பர் ஒருவருடன் விருந்துக்காக வெளியே சென்றுள்ளார்.

அப்போது அந்த மாணவர், தனது மேலும் இரண்டு நண்பர்களையும் அழைத்து வந்துள்ளார். அவர்கள் நால்வரும் எலகங்கா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அங்கு அந்த மூன்று இளைஞர்களும் மது அருந்தியதுடன், மாணவியையும் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளனர்.

மது போதையில் மாணவி மயங்கிய நிலையில், அவரது நண்பரான அந்த மாணவர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மற்ற இரு நண்பர்களும் துணையாக இருந்துள்ளனர். மயக்கம் தெளிந்த பிறகு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, இது குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த மூன்று இளைஞர்களையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது குறித்துப் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.