ஜம்மு-காஷ்மீரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை தலைமையகம் அருகே சீன தயாரிப்பு துப்பாக்கி டெலஸ்கோப் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவின் அஸ்ராராபாத் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் குப்பையில் கிடந்த இந்த கருவியை எடுத்து விளையாடி கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த டெலஸ்கோப் ஸ்னைப்பர் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய அதிநவீன கருவி என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சித்ரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பா மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், பாகிஸ்தான் தொலைபேசி எண்களுடன் தொடர்பில் இருந்ததாக அனந்த்நாக்கை சேர்ந்த தன்வீர் அகமது என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய அலுவலகங்கள் உள்ள பகுதியில் ராணுவ தளவாட கருவி கண்டெடுக்கப்பட்டது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Edited by Siva