ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சி…!
TV9 Tamil News December 22, 2025 09:48 PM

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்க அதர்வா முரளி சிவகார்த்திகேயனின் தம்பியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராணா டகுபதி, பேசில் ஜோசஃப், குரு சோமசுந்தரம், பிரித்வி ராஜன், தேவ் ராம் நாத் என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியாகும் 100-வது படம் இது என்பது குறுப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சி

இந்த நிலையில் இந்தப் படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. படத்தின் புரமோஷனுக்காக வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சியை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பு கிடைத்து வருவதால் வருகின்றட் 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வரை நீட்டித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… Kiara Advani: யாஷின் டாக்சிக் படத்தில் இணைந்த கியாரா அத்வானி.. வெளியானது கேரக்டர் அறிமுக போஸ்டர்!

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Owing to your overwhelming response, the #Parasakthi World extends till Dec 25 🥁#WorldOfParasakthi | Valluvar Kottam | 12 PM – 10 PM#ParasakthiFromPongal@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_… pic.twitter.com/0r0wEwxsh7

— DawnPictures (@DawnPicturesOff)

Also Read… இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து ஜிவி. பிரகாஷ்தான்.. புகழ்ந்து தள்ளிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.