தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காத தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 'மதச்சார்பின்மை' பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் பிற மத விழாக்களில் ஆர்வத்துடன் பங்கேற்கும் நிலையில், இந்துக்களின் முக்கிய பண்டிகையை புறக்கணிப்பது அவரது ஒருதலைப்பட்சமான போக்கை காட்டுகிறது என்றார். அனைத்து மதங்களையும் சமமாக நடத்தாத ஒருவருக்கு மதச்சார்பின்மை என்ற வார்த்தையை பயன்படுத்த தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 100 நாள் வேலைத் திட்ட விவகாரத்தில் திமுக அரசு குளறுபடிகளை செய்வதாகவும், பிரதமர் மோடி இத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி ஏழை மக்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநில அரசின் நிர்வாக தோல்விகளை மறைக்க மத்திய அரசு மீது பழி சுமத்துவதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
Edited by Siva