மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வரும் டிசம்பர் 27, 2025 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை தலைமைக் கழகம் ‘தாயகம்’ வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவான உரையாற்ற உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 28, 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் அதே ‘தாயகம்’ வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த முக்கிய கூட்டத்திற்கு கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமை வகிக்கிறார்.
மாநில அரசியல் நிலவரம், கட்சியின் அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இதில் விவாதிக்கப்பட உள்ளன" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.