சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பேஷன் உலகின் மினுமினுப்பிற்கு பின்னால் இருக்கும் சவால்களை கண்முன் நிறுத்தியுள்ளது. ஒரு பேஷன் ஷோவில் மாடல் ஒருவர் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், நேர்த்தியான உடையுடனும் மேடையில் ‘கேட் வாக்’ செய்து கொண்டிருந்தார். பார்வையாளர்களின் கவனம் முழுவதும் அவர் மீது இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மேடையின் விளிம்பைக் கவனிக்காமல் நிலைதடுமாறி அவர் மேடையிலிருந்து கீழே விழுந்தார்.
இந்த அதிர்ச்சியான சம்பவம் அங்கிருந்தவர்களை உறைய வைத்ததுடன், சமூக வலைதளங்களில் பலரையும் கவலையடையச் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. மாடல்கள் மேடையில் நடக்கும்போது ஒரு சிறிய கவனச்சிதறல் கூட எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக மாறியுள்ளது.
View this post on Instagram
A post shared by Entertainment (@hyderabad_ki_awaam)
“>
இந்நிலையில் மாடலிங் துறை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. இந்த விபத்தில் அந்த மாடலுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் பலரும் தங்களது கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.