நண்பரே மன்னிக்கவும் தப்புதான் - செல்லூர் ராஜு பதிவு..!
Top Tamil News December 23, 2025 06:48 AM

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் செல்பி எடுத்தது போன்ற வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் செல்பி எடுப்பதுபோல்" என்று தெரிவித்திருந்தார்.


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அந்த பதிவுக்கு கீழே, "ஏ.ஐ.-ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா?" என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு செல்லூர் ராஜு, "நண்பரே மன்னிக்கவும் தப்புதான்" என்று தெரிவித்துள்ளார்.


 


 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.