தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனித்த அடையாளம் பதித்துள்ளவர் சிவகார்த்திகேயன்.சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல குறிப்பிடத்தக்க திரைப்படங்களை அவர் உருவாக்கி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் பேனரில் வெளியான கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் உள்ளிட்ட படங்கள் விமர்சகர்களின் பாராட்டையும், ரசிகர்களின் ஆதரவும் பெற்ற வெற்றிப் படங்களாக அமைந்தன.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கான டீசர் வீடியோ ஒன்றை நிறுவனம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அந்த வீடியோவில், அடுத்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் எனக் குறிப்பிட்டுள்ளதால், ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் சிவகார்த்திகேயனின் அடுத்த முயற்சி, மீண்டும் கவனம் ஈர்க்கும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.