இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) தனது ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை அதிரடியாக குறைத்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாக 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 5.25 சதவீதமாக உள்ளது. இவ்வாறு படிப்படையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைந்த ரெப்போ வட்டிகடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் கடந்த சில மாதங்களில் பலமுறை குறைந்துள்ளது.
இதையும் படிங்க : டிசம்பர் 31 தான் கடைசி.. அதற்குள் பான் கார்டில் இதை செய்யவில்லை என்றால் சிக்கல்!
ஆர்பிஐ ரெப்போ வட்டியை மேலும் குறைக்கும் – யூனியன் வங்கி2025-ல் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி நான்கு முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த நாணய கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, ரெப்போ வட்டி விகிதம் வெறும் 5 சதவீதமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக யூனியன் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இதையும் படிங்க : புதிய வாடகை விதிகள் 2025: மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? முன் பணம் குறையுமா?
கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும்இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதம் தான் இந்த ரெப்போ வட்டி விகிதம். அதன்படி, ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும்போதெல்லாம் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும். இந்த நிலையில், மேலும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் பட்சத்தில் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.