சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஏற்கனவே ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டியிருந்த நிலையில், இன்று மேலும் ரூ.1,600 உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,160 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் பாதையிலேயே வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து ரூ.2,34,000-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் பங்குச் சந்தை மாற்றங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை எட்டக்கூடும் என நகை வியாபாரிகள் கணித்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் திருமண சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்குவோர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
Edited by Siva