அமெரிக்காவின் நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. இன்று காலை 8.54 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. ஏவுதலுடன் இந்திய விண்வெளி சாதனையில் இன்னொரு பெருமை சேர்ந்து விட்டது.
View this post on InstagramA post shared by Prag News (@pragnewsofficial)
ஏவப்பட்ட 15 நிமிடம் 52 விநாடிகளில், 520 கிலோமீட்டர் உயரத்தில், புவியின் தாழ் வட்டப்பாதையில் செயற்கைக்கோள் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ‘ப்ளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் பதித்துள்ளது. திட்டமிட்டபடி அனைத்து கட்டங்களும் சரியாக செயல்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட் ஏவுதல் இந்தியாவுக்கு ஒரு புதிய மைல்கல் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இதுவே என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் செலுத்திய பெருமையையும் பெற்றுள்ளது. ககன்யான் திட்டத்திற்கான நம்பிக்கையும் இந்த வெற்றியால் மேலும் உயர்ந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!