காதலை மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர்.. இப்போது சிறையில்..!
Webdunia Tamil December 24, 2025 11:48 PM

பெங்களூருவில் காதலை மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்த நவீன் குமார் என்ற இளைஞரை துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன்பாக இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு மாறியும், நவீன் விடாமல் பின்தொடர்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காரில் வந்த நவீன், அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து, தலையில் தாக்கி அநாகரீகமாக நடந்துகொண்டார்.

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஞானபாரதி போலீசார் நவீன் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.