ஜிவி பிரகாஷின் இம்மார்ட்டல் படத்தின் டீசரை வெளியிட்ட ரவி மோகன் – வைரலாகும் வீடியோ
TV9 Tamil News December 25, 2025 12:48 AM

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைக்கும் பணிகளில் பிசியாக இருந்து வந்தாலும் அவ்வபோது நாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். அதன்படி இவரது நடிப்பில் இந்த ஆண்டில் கிங்ஸ்டன் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி இரண்டாவது முறையாக இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகி இருந்தாலும் பெரிய அளவில் படம் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் பிசியாக படங்களுக்கு இசையமைத்து வரும் வேலையில் தொடர்ந்து படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி அடுத்தடுத்து 5 படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள இம்மார்ட்டல் படத்தின் டீசரை நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ளார்.

சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியானது இம்மார்ட்டல் பட டீசர்:

இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகை கயடு லோகர் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்ய கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா த்சம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தா என பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நிலம்.. நீர்.. காற்று.. முக்கியமா பணம் – அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது சிக்மா படத்தின் டீசர்

ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Tamil : https://t.co/J6L7LsuHfA#Immortal teaser for u all . The new world unveils. Love you GV bro

— Ravi Mohan (@iam_RaviMohan)

Also Read… ட்ரெய்ன் படத்திலிருந்து வெளியானது கன்னக்குழிக்காரா பாடலின் லிரிக்கள் வீடியோ!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.