'என் கணவர் மற்றும் மகன் பெயர் முருகன் பெயர் தான்'; திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி..!
Seithipunal Tamil December 25, 2025 01:48 AM

திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசிய போது, தி.மு.க., ஆட்சியில் எதிர்த்து போராட பல விஷயங்கள் இருந்தாலும் பா.ஜ.,வினர், திருப்பரங்குன்ற விவகாரத்தை மட்டுமே கையில் எடுத்துள்ளனர். முருகன் என்ற பெயரை வைத்துக் கொள்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமாவளவன் இந்த பேச்சுக்கு பாஜ பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து திருப்பரங்குன்றத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

திருமாவளவன் மேல் நான் ரொம்ப மரியாதை வைத்திருந்தேன். அவர் சேராத இடம் சேர்ந்து, மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், முருகன் என்று பெயர் வைத்துள்ளனரா..? கொண்டு வந்து காட்டுங்கள் என்று கேட்கிறாரே..? என் மகனின் பெயர் கார்த்திகேயன் தான் என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் முருகன் இருக்கிறார். எத்தனை பேருக்கு அங்கு முருகன்னா என்று பெயர் இருக்கிறது தெரியுமா..? என்றும், முருகையா என்று பெயர் இருக்கும். எத்தனை பேரை நான் வந்து உங்களுக்கு காட்டணும் என்றும் தெரிவித்துள்ளதோடு, முருகன் என்று பெயர் இருக்கா? அடுத்தது குமரன் என்று பெயர் இருக்கா? என் கணவர் பெயர் குமார். அடுத்தது அலகு குத்துவீர்களா? மொட்டை அடிப்பீர்களா என இப்படி ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு நாம் பதிலே சொல்ல முடியாது சாமி. ஏன் என்றால் அவருக்கு விஷயமும் தெரியவில்லை. நம்பிக்கையும் இல்லை என்று திருமாவளனை விமர்சித்துள்ளார்.

திருமாவளனுக்கு வெறும் வெறுப்பு மட்டுமே இருக்கிறதாகவும், ஆபாச சிற்பங்கள் இருக்கிற ஹிந்து கோயில்கள் என்று சொன்ன பெரிய மனிதர் தானே அவர்.? என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு, அவரது கட்சியில் இருந்து எத்தனை பேருக்கு ஆபாச வீடியோ வெளியில் வருகிறது என்று அவர் கணக்கு சொல்வாரா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வேங்கைவயல் இன்னமும் நாறிக்கொண்டு இருக்கிறது. அவர் இன்னும் அங்கே போகவில்லை என்றும்,   தூய்மை பணியாளர்கள் நேற்று வரைக்கும் போராடிக் கொண்டு இருக்கின்றனர். இவர் என்ன சொன்னாரு..? அதைவிட ஆபாசம் இருக்கிறதா..? என்று பேசியுள்ளார்.

அத்துடன், நீங்கள் யாரும் வேலை நிரந்தரம் கேட்காதீர்கள் என்றும், அப்படி கேட்டால் இதுதான் உங்களின் வாழ்க்கை என்று ஆகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதனால் அங்கே உள்ள ஒப்பந்ததாரரிடம் சென்று அதே வேலையை செய்யுங்கள் என்று பெரிய மனிதர் தானே இவர் என்று பேசியுள்ளார்.

அத்துடன், திருமாவளவனை விட ஒரு மனசாட்சி இல்லாத ஆபாச பேச்சாளர் யாராவது இருக்கிறார்களா இங்கே..?  என்றும், கேட்டால் உடனே என் மீது வழக்கு போடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், திருமாவளவனின் கொள்கை ரீதியாக நாம் எதுவும் விமர்சிக்க முடியாது. நான் இதுமாதிரி ஒருதடவை கேட்டதற்கு கொடும்பாவியை எரித்து வழக்கு போட்டுள்ளனர் என்று நடிகை கஸ்தூரி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.