Womens Cricket: உள்நாட்டு கிரிக்கெட்டிலும் உயர்ந்த சம்பளம்.. மகிழ்ச்சியில் மகளிர் வீராங்கனைகள்.. அசத்தும் பிசிசிஐ!
TV9 Tamil News December 25, 2025 02:48 AM

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (Indian Womens Cricket Team) கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2025 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இதன்மூலம், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. ஆண்கள், பெண்கள் என எந்தவொரு வேறுபாடுமின்றி ஒவ்வொரு இந்தியரும் இந்த வெற்றியைக் கொண்டாடி தீர்த்தனர். இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மகளிர் வீராங்கனைகளுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. அதன்படி, பிசிசிஐ (BCCI) பெண் உள்நாட்டு கிரிக்கெட் வீராங்கனைகளின் போட்டிக் கட்டணத்தையும் மாற்றியுள்ளது. இப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் பெண் வீரர்களின் போட்டிக் கட்டணம் ஆண் வீரர்களின் போட்டிக் கட்டணமாக மாறியுள்ளது.

ALSO READ: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025-ல் புதிய சாதனை.. 2 பதக்கங்களை வென்ற ஜோதி யர்ராஜி..

போட்டி கட்டணம் எவ்வளவாக அதிகரித்துள்ளது..?

🚨 News Alert 🚨

The BCCI has cleared a revised pay structure for domestic women cricketers, delivering a major boost to match fees. 💪🏏

* ₹50,000 per day for players in the XI in one-day & multi-day matches
* ₹25,000 per T20 match#BCCI #WomensCricket #onecricket pic.twitter.com/HG7bsXHIGo

— onecricketcom (@onecricketcom)


உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கான போட்டி கட்டணத்தையும், மகளிர் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கான போட்டி கட்டணத்தையும் பிசிசிஐ இரட்டிப்பாக்கியுள்ளது. இதன்படி, உள்நாட்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் XI அணியில் இடம்பெறும் மகளிர் வீராங்கனைகளுக்கு ரூ.50,000 வழங்கப்படும். ரிசர்வ் வீராங்கனைகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.25,000 வழங்கப்படும். அதே நேரத்தில், டி20 போட்டிகளில் விளையாடும் XI அணியில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும். மேலும், பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கு ரூ.12,500 வழங்கப்படும். முன்னதாக, ஒரு போட்டியில் வீராங்கனைகள் விளையாடும் XI அணியில் இடம் பெற்றிருந்தால் ரூ.20,000 மற்றும் பெஞ்சில் இருந்தால் ரூ.10,000 பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனியர் லெவல்களை போல ஜூனியர் லெவல் போட்டிகளிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளில், விளையாடும் XI அணிக்கு ஒரு நாளைக்கு ரூ. 25,000 மற்றும் ரிசர்வ் வீரர்கள் ரூ. 12,500 பெறுவார்கள். T20 போட்டிகளில், விளையாடும் XI அணியில் உள்ள வீரர்கள் ரூ. 12,500 மற்றும் விளையாடும் XI அணியில் இல்லாத வீரர்கள் ரூ. 6,250 பெறுவார்கள்.

ALSO READ: தரவரிசையில் தீப்தி செய்த சம்பவம்.. பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்தி முதலிடம்!

நடுவர்களுக்கும் உயர்ந்த போட்டி கட்டணம்:

நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் உள்ளிட்ட போட்டி அதிகாரிகளும் போட்டி கட்டணத்தில் உயர்வை பெற்றுள்ளனர். உள்ளூர் போட்டிகளின் லீக் போட்டிகளுக்கு நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும். நாக் அவுட் போட்டிகளுக்கு அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை ஊதியம் வழங்கப்படும். ரஞ்சி டிராபி லீக் போட்டிகளில் நடுவர்களுக்கு ஒரு போட்டிக்கு தோராயமாக ரூ.1.60 லட்சம் கிடைக்கும். நாக் அவுட் போட்டிகளில் நடுவர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தரப்பட இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.