இந்த மனசு தான் சார் கடவுள்…. தீனியை பார்த்ததும் கூட்டம் கூட்டமாக வந்த பறவைகள்… வைரலாகும் கியூட் வீடியோ…!!!
SeithiSolai Tamil December 25, 2025 02:48 AM

அன்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவு எவ்வளவு அழகானது என்பதை விளக்கும் விதமாக, பறவைகளுக்கு உணவளிக்கும் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் கையில் பறவை தீவனத்துடன் வருவதைக் கண்டதும், அப்பகுதியில் உள்ள மின்சாரக் கம்பிகள் மற்றும் மரங்களில் அமர்ந்திருக்கும் ஏராளமான பறவைகள் அவரை அச்சமின்றி பின்தொடர்ந்து வருகின்றன.

 

அவர் ஓரிடத்தில் அமர்ந்தவுடன், அனைத்து பறவைகளும் அவரைச் சூழ்ந்து கொள்கின்றன. அவர் அன்புடன் வழங்கும் உணவை அவை நம்பிக்கையுடன் உண்ணும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தினமும் காலை வேளையில் அந்த நபர் வருவதற்காகப் பறவைகள் காத்திருப்பதாகவும், மொழிகளைக் கடந்த இந்த அன்பின் மொழிதான் மனிதநேயத்தின் அடையாளம் என்றும் இணையதளவாசிகள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.