தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நேற்று (டிசம்பர் 24) சென்னைக்கு வருகை தந்தார். மாநில பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் குறித்து ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணிக்கு வரவில்லை என்றாலும், அவரைப் பற்றிப் பொதுக்கூட்டங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ தேவையின்றி விமர்சிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது வரும் தேர்தலில் பாஜக வகுக்கும் புதிய வியூகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.