உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட், வீரத்திற்கும் சாகசத்திற்கும் அடையாளமாக இருந்தாலும், இன்று மனிதர்களின் பொறுப்பற்ற செயலால் குப்பைக் கிடங்காக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில், எவரெஸ்ட் பேஸ் கேம்ப் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், காலியான ஆக்சிஜன் சிலிண்டர்கள், கிழிந்த கூடாரங்கள் என குப்பைகள் சிதறிக் கிடப்பது தெளிவாக தெரிகிறது.
View this post on InstagramA post shared by ThePrint (@theprintindia)
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள் வருவதால், அவர்கள் விட்டுச் செல்லும் கழிவுகள் பனிக்குள் புதைந்து, பனி உருகும் போது மீண்டும் வெளிப்பட்டு அந்தப் பகுதியின் புனிதத்தையே கெடுக்கின்றன. இந்த அவல நிலை குறித்து இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் உள்ளிட்ட பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கட்டுப்பாடற்ற சுற்றுலாவும், அனுபவமற்ற வீரர்களுக்கு எளிதாக வழங்கப்படும் அனுமதிகளுமே இந்த நிலைக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நேபாள அரசு குப்பை அகற்றும் பணிகளை மேற்கொண்டாலும், புதிய குப்பைகள் சேர்வது நிற்கவில்லை. இயற்கையை வெல்வது என்பது அதை சிதைப்பது அல்ல என்பதை உணர்ந்து, கடுமையான சட்டங்களும் விழிப்புணர்வும் மட்டுமே எவரெஸ்டின் அழகை மீட்டெடுக்க முடியும் என சமூக வலைதளங்களில் குரல்கள் எழுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!