தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது 14 வயதில் அரசியலுக்கு வந்ததாகவும், அன்று முதல் இன்றுவரை தனக்குடென்ஷன் தான். அது பழகிவிட்டதாக கூறியுள்ளார்.தமிழக விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய போது அவர் மேலும் கூறியதாவது:
தான் விளையாடிய முதல் விளையாட்டு ஹாக்கி என்றும், அவருக்கு கிரிக்கெட்டில் கபில்தேவ், சச்சின், தோனியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இப்போது வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவதாகவும், பள்ளியில் படிக்கும் போது தெருவில் கிரிக்கெட் விளையாடி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கிரிக்கெட் விளையாடியுள்ளதாகவும், அவருக்கு பந்து வீசி உள்ளதாக வும், தான் 'ஆப் ஸ்பின்' வீசுவேன் என்று கூறியுள்ளார். அத்துடன், பள்ளியில் படிக்கும் போது புக் கிரிக்கெட் விளையாடியது இப்போது கூட ஞாபகம் வருகிறது என்று நினைவு கூர்ந்துள்ளார்.

சினிமா நட்சத்திரங்களுடன் நடந்த கிரிக்கெட் விளையாடி உள்ளதாகவும், அதில், நடிகர் சிம்பு, நெப்போலியன் ஆகியோரது விக்கெட் என மூன்று விக்கெட் வீழ்த்தி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தோனியின் கேப்டன்ஷிப் பிடிக்கும் என்றும், அவரது ஸ்டைல், ஸ்மைல், ஸ்வீட்டாக கேப்டன்ஷிப் செய்வார் என்றும் கூறியுள்ளார். மேலும்,இவ்வளவு வயதை கடந்தாலும் தோனி விளையாட வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். தோனியை தன்னுடன் ஒப்பிட முடியாது. தோனி பெரிய வழிகாட்டியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து ஹாக்கி விளையாடுகின்றனர். இது தொடரும் என்றும், விளையாட்டு துறையில் முன்னேறி கொண்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறியதோடு, தான் 14 வயதில் அரசியலுக்கு வந்ததாகவும், அப்போது முதல் 'டென்ஷன்' தான். இது பழகிவிட்டதாகவும், அதனை கடந்து சென்றுவிடுவேன் என்றும் கூறியதோடு, அழுத்தம் இருந்தால் புத்தகம் படிப்பத்தோடு, டிவி பார்ப்பது மற்றும் பாட்டு கேட்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.