தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படங்கள் இரண்டு உள்ளது. அதில் ஒன்று நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாவதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காண முக்கிய காரணம். அதன்படி ஜன நாயகன் படம் வருகின்ற ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் வருகின்ற 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக பராசக்தி படம் 14-ம் தேதி வெளியாகவதாக அறிவித்து இருந்த நிலையில் படத்தின் வெளியீட்டை முன்னதாகவே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதில் பல அரசியல் காரணங்கள் உள்ளது என்று ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் சென்சார் தொடர்பான அப்டேட் தற்போது வைரலாகி வருகின்றது.
பராசக்தி படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிய படக்குழு:பராசக்தி படத்தின் அதிக காட்சிகளை நீக்க தணிக்கைக்குழு வலியுறுத்தியதால் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பியுள்ளது படக்குழு. மேலும் இண்நி எதிர்ப்பு போராட்டம் குறித்த காட்சிகள் படத்தில் அதிகம் உள்ளதால் தணிக்கைக்குழு கட் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸில் எல்லாரும் அவங்க அவங்க கேம் ஆடுறாங்க… அமித் மனைவி ஓபன் டாக்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:🚨 #Parasakthi – Team has planned to send the film to the Revising Committee as the Censor Board has removed scenes & dialogs related to the Protest on Hindi Imposition 👀
Source: News 18 pic.twitter.com/scqwklFjZ7
— VCD (@VCDtweets)
Also Read… பராசக்தி படத்திற்காக மிகவும் மெனக்கெட்டார் ஸ்ரீலீலா – இயக்குநர் சுதா கொங்கரா