“அடேங்கப்பா.. இவரு மனுஷனா இல்ல வேற்றுக்கிரகவாசியா?”செல்லப் பிராணி வளர்க்குறதுல இப்படியொரு விபரீதமா? நெஞ்சை உறைய வைக்கும் வைரல் வீடியோ.. கடைசியில நடந்த ட்விஸ்ட்!”
SeithiSolai Tamil December 27, 2025 08:48 PM

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பகீர் வீடியோ, நெட்டிசன்களை உறைய வைத்துள்ளது. பொதுவாக நாய், பூனை அல்லது கிளி போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதே வழக்கம். ஆனால், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் மலைப்பாம்பை தனது உற்ற நண்பனாகக் கருதி அதன் மீது ஏறி அமர்ந்து விளையாடுவது பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

@phriie_putranaja28 என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த காட்சியில், அந்த இளைஞர் அந்த ராட்சத மலைப்பாம்பின் முகத்தை தடவிக் கொடுப்பதும், அதைக் கட்டியணைத்துக் கொள்வதும் பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பல இணையவாசிகள், “வனவிலங்குகள் எப்போது வேண்டுமானாலும் அதன் இயற்கை குணத்திற்கு மாறக்கூடும்; பசி எடுக்கும் நேரத்தில் இந்த நட்பு ஆபத்தாக முடியும்” என எச்சரித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Phriie putra naja (@phriie_putranaja28)