டிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் இன்று மலேசியாவில் நடைபெற்று வருவதுதான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
பத்திரிக்கைகளும், ஊடகங்களும், சமூகவலைத்தளங்களும் இதைப்பற்றிய அப்டேட்டுகளையும், செய்திகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மதியம் முதலே இசை நிகழ்ச்சி நடந்த நிலையில் அதன்பின் விஜய் ரசிகர்கள் முன்பு பேசினார். அதன் பின் ஆடியோ லான்ச் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டு சென்றார். அதோடு அவரின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அனிருத், இயக்குனர்கள் அட்லி, நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்றுள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் மைதானத்தில் ஜனநாயகன் ஆடியோ லான்ச் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த விழாவில் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக இருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் தெலுங்கில் பாலையா நடித்து வசூலை அள்ளிய பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது. 2026 ஜனவரி 9ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படமே விஜய்க்கு கடைசிப்படம் என்பதால் விஜயை வழியனுப்பும் ஒரு நிகழ்ச்சியாகவே இந்த விழாவை ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதனால்தான், ஜனநாயகன் படத்திற்கு சம்பந்தமில்லை என்றாலும் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருக்கிறார்கள்.
