Vijay: SKக்கு நன்றி இல்லையா? அப்போ கேப்டன் கூட மட்டும் விஜய் மோதலாமா? லிஸ்ட்ட பாருங்க
CineReporters Tamil December 27, 2025 10:48 PM

துப்பாக்கியை பிடித்து கையில் கொடுத்தவருக்கே துரோகம் செய்றாருனு சிவகார்த்திகேயனை நெட்டிசன்களும் விஜய் ரசிகர்களும் வச்சு செய்து வருகின்றனர். ஆனால் விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்ததன் மூலமாகத்தான் விஜயை கொண்டாட ஆரம்பித்தனர் ரசிகர்கள். அப்படி விஜயகாந்தால்தான் விஜய்க்கு அடுத்தகட்ட வாழ்க்கை ஆரம்பித்தது. அந்த நன்றிக் கடன் விஜய்க்கும் இருக்கணும் அல்லவா?

ஆனால் இன்னொரு வாழ்க்கையை காட்டிய விஜயகாந்துடன் விஜய் எவ்வளவு முறையோ மோதி இருக்கிறார். ஆமாம். பல விஜய் படங்கள் விஜயகாந்த் படங்களுடன் ஒன்றாக மோதி இருக்கின்றன. செந்தூரப்பாண்டி படத்தில் ஒன்றாக அதுவும் விஜய்க்கு அண்ணனாக விஜயகாந்த் நடித்திருப்பார். இது விஜயை புரோமோட் செய்யும் வகையில் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பீக்கில் இருந்த விஜயகாந்த் எஸ்.ஏ.சந்திரசேகருக்காக இதை செய்து கொடுத்தார்.

ஆனால் விஜய் பதிலுக்கு என்ன செய்தார். இதுதான் இப்போது வரைக்கும் விஜயகாந்த் ரசிகர்களுக்கான கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் பல படங்கள் விஜயகாந்த் மற்றும் விஜய் ஒன்றாக மோதியிருக்கின்றன.விஜயகாந்துக்கு செகண்ட் இன்னிங்க்ஸாக அமைந்த படம் ரமணா திரைப்படம். அதே போல் விஜயை ஆக்ஷன் மோடுக்கு மாற்றிய திரைப்படம் பகவதி. இந்த இரு படங்களும் ஒன்றாக மோதியது.

அதற்கடுத்தப்படியாக விஜயகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த படம் சொக்கத்தங்கம். அதில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். அதே நேரம் விஜய் நடிப்பில் கலகலப்பான காமெடி மற்றும் காதல் திரைப்படமாக வெளியான படம் வசீகரா. இந்த இரு படங்களும் ஒன்றாக போட்டியிட்டன.

அதே போல் விஜயகாந்தின் ராஜ்ஜியம் திரைப்படமும் விஜய் நடித்த தமிழன் திரைப்படமும் ஒன்றாக போட்டியிட்டன. அதே வரிசையில் விஜயகாந்துக்கு மற்றுமொரு மாபெரும் ஹிட்டடித்த தவசி திரைப்படமும் விஜய் நடித்த ஷாஜகான் திரைப்படமும் ஒரே நேரத்தில்தான் ரிலீஸானது.

அதுமட்டுமில்லாமல் வானத்தை போல் திரைப்படம் இன்று வரை குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறியிருக்கிறது. இந்தப் படமும் விஜய் , ஷாலினி நடிப்பில் வெளியான கண்ணுக்குள் நிலவு படமும் ஒன்றாகத்தான் மோதியது.இப்படி தர்ம சக்கரம் – என்றென்றும் காதல், வாஞ்சிநாதன் – ப்ரெண்ட்ஸ், தாயகம் – கோயம்புத்தூர் மாப்பிள்ளை, என விஜயகாந்த் படங்களும் விஜய் படங்களும் ஒன்றுக்கொன்று மோதியிருக்கின்றன. அப்போ இதெல்லாம் என்னென்னு சொல்வீங்கனு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.