2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், சென்னை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சீமான் அதிரடியாக பேசினார். “எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம். திராவிடர்கள் என சொல்வோரும் வேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும்” என்று அவர் கூறினார். தமிழக அரசியல் முழுவதும் இரண்டு தரப்புகளுக்கு இடையிலான போட்டி தான் எனவும், அது திராவிட கருத்தியலுக்கும் தமிழ் தேசியத்திற்குமான மோதல் எனவும் தெரிவித்தார்.

திராவிட கட்சிகள் மக்களின் வறுமை மற்றும் அறியாமையை பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதாக சீமான் குற்றம்சாட்டினார். இலவசங்கள் வளர்ச்சி அல்ல, வீழ்ச்சி என்றார். நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, தற்சார்பு பொருளாதாரம் தான் மாற்றத்துக்கான அடிப்படை என வலியுறுத்தினார். சாராய வருமானமா, கால்நடை பொருளாதாரமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

அரசுப் பள்ளி படித்தவர்களுக்கே அரசு வேலை, அரசு மருத்துவமனையில்தான் அதிகாரிகள் சிகிச்சை பெற வேண்டும் என சட்டம் கொண்டுவருவோம் என்று சீமான் அறிவித்தார். சாதி, மத அரசியலை அவர் கடுமையாக விமர்சித்தார். “மனிதமே புனிதம்” என்ற கொள்கையுடன் மக்கள் நிற்க வேண்டும் என்றார். இந்த உரை, 2026 தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் அரசியல் கோட்டை தெளிவாக வரையறுத்ததாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!