உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள் தொடர்பான 2024-ம் ஆண்டுக்கான கரப்ஷன் பெர்செப்ஷன் இன்டெக்ஸ் (CPI) பட்டியல் வெளியாகியுள்ளது. டிரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், மொத்தம் 180 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடாக டென்மார்க் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. கடுமையான சட்டங்கள், வெளிப்படையான நிர்வாகம், அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்கள் அரசியல் முடிவுகளை கண்காணிக்கும் அமைப்பு ஆகியவை, டென்மார்க்கை ஊழலற்ற நாடாக நிலைநிறுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2-ம் இடம் – பின்லாந்து:
அரசின் நேர்மையான செயல்பாடுகள், சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு குறைவான சூழல் காரணமாக, பின்லாந்து முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
3-ம் இடம் – சிங்கப்பூர்:
ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்கள், லஞ்சம் பெறுவோருக்கு கடும் தண்டனை மற்றும் திறமை அடிப்படையிலான அரசு பணியமர்த்தல் ஆகியவை சிங்கப்பூரை முன்னணி நாடாக வைத்துள்ளன.
4 முதல் 10 வரை
4-ம் இடம்: நியூசிலாந்து
5-ம் இடம்: சுவிட்சர்லாந்து
6-ம் இடம்: நார்வே
7-ம் இடம்: லக்சம்பர்க்
8-ம் இடம்: சுவீடன்
9-ம் இடம்: நெதர்லாந்து
10-ம் இடம்: ஆஸ்திரேலியா
இந்த நாடுகளில் பெரும்பாலான அரசு பணிகள் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதும், அரசின் செலவுகள் வெளிப்படையாக இருப்பதும், ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் அணுகல் எளிதாக இருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்த முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
மொத்தம் 180 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 96-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை பெரிய அளவில் முன்னேறவில்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
180-வது இடம்: தெற்கு சூடான்
அதனைத் தொடர்ந்து சோமாலியா, வெனிசூலா, சிரியா ஆகிய நாடுகள் மிகவும் ஊழல் அதிகமாக உள்ள நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
டென்மார்க் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நாட்டின் வெளிப்படையான நிர்வாக அமைப்பு மற்றும் பொறுப்புணர்வு கொண்ட அரசியல் கலாசாரம் இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்