இந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கு தமிழ்நாடு ஆற்றும் எதிர்விணை இதுதான் : சு. வெங்கடேசன் எம்.பி...!
Seithipunal Tamil December 28, 2025 04:48 AM

தனித்தமிழ் இயக்கத்தின் 110 ஆவது ஆண்டுவிழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், குறிப்பிடுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத்தொடரில்தான் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதில் அதிகமாக உரை நிகழ்த்தப்பட்ட மொழி தமிழ் என்று கூறியுள்ளார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத் தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத்தொடரில்தான் என்று தெரிவித்துள்ளார். இதுதான் இந்தி திணிப்பிற்கும், சமஸ்கிருத திணிப்பிற்கும் தமிழ்நாடு ஆற்றும் எதிர்விணை என்று சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.


© Copyright @2025 LIDEA. All Rights Reserved.