'காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சியல்ல. அது இந்தியாவின் ஆன்மாவின் குரல்'; ராகுல் எம்பி..!
Seithipunal Tamil December 29, 2025 02:48 AM

''காங்கிரஸ் என்பது வெறும் கட்சியல்ல. அது இந்தியாவின் ஆன்மாவாக திகழ்கிறது,'' என அக்கட்சியின் 140வது நிறுவன தினத்தை முன்னிட்டு ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: காங்கிரசின் நிறுவன தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் வாழ்த்துகள். அந்த வரலாற்று பாரம்பரியத்துக்கும், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களுக்கும், அரசியலமைப்பின் அடித்தளத்தை அமைத்து ஜனநாயகம், மதசார்பின்மை, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் மதிப்புகளை வலுப்படுத்திய அந்த மாபெரும் தியாகிகளுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

காங்கிரஸ் என்பது வெறும் அரசியல் கட்சியல்ல. அது இந்தியாவின் ஆன்மாவின் குரல். ஒவ்வொரு பலவீனமான, ஒவ்வொரு நலிந்த, ஒவ்வொரு கடின உழைப்புக்கும் துணை நிற்கிறது. வெறுப்பு, அநீதி மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக உண்மை, தைரியம் மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்பிற்காக இன்னும் வலுவாக போராட உறுதி பூண்டுள்ளோம்.'' என்று  ராகுல் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.