வங்கதேசத்தில் ஹிந்துக்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, '''வங்கதேசத்தில் அனைத்து வகையான மத வன்முறைகளையும் சந்தேகத்துக்கு இடமின்றி அமெரிக்கா கண்டிக்கிறது. ''என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
வங்கதேசத்தில் அனைத்து வகையான மத வன்முறைகளையும் சந்தேகத்துக்கு இடமின்றி அமெரிக்கா கண்டிக்கிறது மற்றும் அங்கு வசிக்கும் அனைத்து உறுதி செய்ய சமூக மக்களின் பாதுகாப்பை வங்கதேச இடைக்கால அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள்ளார். அத்துடன், மத சுதந்திரம், கருத்து சுதந்திரம், அமைதியான கூட்டம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறதாக அவர் மேலும், கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அமெரிக்க எம்பி ரோ கண்ணா, 'வெறுப்பு மற்றும் மதவெறியின் இந்த மோசமான செயல்களுக்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட வேண்டும்' எனக்கூறியுள்ளார்.
சமீபத்தில், வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து மத இளைஞரை முஸ்லீம் கும்பல் ஒன்று கொடூரமாக அடித்து கொன்றதோடு, அவரை சாலையில் வைத்து தீ மூட்டி எரித்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், ராஜ்பாரி மாவட்டத்தில் அம்ரித் மண்டல் (29) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்த சூழலில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்படுவதை கண்டித்து, உலகின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. நம் நாட்டில் டில்லி மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களிலும் போராட்டம் நடந்தது. குறிப்பாக தலைநகர் டில்லியில் நடந்த போராட்டத்தில் பல்லாயிர கணக்கானோர் கலந்துகொண்டனர்.

வங்கதேசத்தில் சிறுபான்மையனருக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரிட்டன் தலைநர் லண்டனில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு வங்காள ஹிந்து ஆதர்ஷ சங்கம் போராட்டம் நடத்தியது. அத்துடன், நேபாளத்திலும் பல இடங்களில் போராட்டம் நடந்தன. பல இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.