தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக இருந்துவருபவர் நடிகர் பிரபாஸ் (Prabhas). இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக, பான் இந்திய மொழிகளில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் தி ராஜா சாப் (The Raja Saab). இயக்குநர் மாருதி (Maruti) இயக்கிய இந்த திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மேலும் தமிழில் 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கிட்டத்தட்ட இப்படத்தில் 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இதில் நடிகைகள் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), நிதி அகர்வால் (Nidhi Agarwal) மற்றும் ரித்தி குமார் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் ஹாரர் மற்றும் நகைச்சுவை கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.அந்த வகையில் நேற்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அதில் மேடையில் பேசிய இயக்குநர் மாருதி சவால் விட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘இது விஜய் அண்ணாவின் அன்பு சாம்ராஜ்யம்’- நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட இயக்குநர் ரத்னகுமார்!
தி ராஜா சாப் பட ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குநர் மாருதி, “இந்த தி ராஜா சாப் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் ஒரு சதவீதம் பூர்த்தி செய்ய தவறினாலும், என்னிடம் கேள்வி கேட்கலாம் என கூறியுள்ளார். பின் அந்த நிகழ்ச்சியில் அவரின் வீட்டு முகவரியையும் கொடுத்து, நேரடியாக எனது வீட்டிற்கே வந்து கேள்விகேட்கலாம்” என அவர் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே சவால் விட்டுள்ளார்.
பிரபாஸின் தி ராஜா சாப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :Hey Siri, define “REBEL AURA” 🌟❤️#Prabhas #TheRajaSaab pic.twitter.com/u5XSjFpKEC
— The RajaSaab (@rajasaabmovie)
இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது, மேலும் இயக்குநர் மாருதி இந்த படமானது நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் இருப்பது, இந்த படத்தின் மீதான உறுதித்தன்மையை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: டிஆர்பியில் டாப் 5 இடங்களை தட்டித்தூக்கிய சன் டிவி… எந்த சீரியல் எந்த இடம் தெரியுமா?
அந்த வகையில் வரும் 2026ல் வெளியாகும் தி ராஜா சாப் படம் நிச்சயமாக பான் இந்திய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், நிச்சயமாக பாக்ஸ் ஆபிசில் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிகிறது.