ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் “களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்று நடிகர் விஜய் பேசியதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.
“அதிமுக களத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்; எங்களை இல்லை என்று சொல்ல இவருக்கு எவ்வளவு தைரியம்?” என்று ஆவேசப்பட்டார்.
மேலும், “விஜய் இதுவரை எத்தனை தேர்தலில் போட்டியிட்டார்? அவருக்கு என்ன அரசியல் பின்புலம் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜு, விஜய்யின் இந்தப் பேச்சு முட்டாள்தனமானது என்று கடுமையாகச் சாடினார்.
நடிகர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் எல்லாம் ஓட்டாக மாறுமா என்பது சந்தேகமே என்று கூறிய செல்லூர் ராஜு, விஜய்யை மறைமுகமாகத் தாக்கினார்.
“சினிமாவில் இருந்து வந்தாலும் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது; எம்.ஜி.ஆர். என்பவர் சரித்திரத்தில் ஒருவர் மட்டும்தான்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
2026 தேர்தலைக் குறிவைத்து விஜய் காய்களை நகர்த்தி வரும் நிலையில், “நாவை அடக்கிப் பேச வேண்டும்” எனச் செல்லூர் ராஜு விடுத்துள்ள இந்த எச்சரிக்கை அரசியல் களத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.