“பார்த்தாலே சங்கியா?”.. திருமாவளவன் மீது கடுமையாக சாடிய தமிழிசை.. பரபரப்பான தேர்தல் வியூகம்..!!!
SeithiSolai Tamil December 30, 2025 01:48 AM

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார்.

“திருமாவளவன் எப்போது பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் சங்கி.. சங்கி.. என்று முத்திரை குத்தி வருகிறார்; இப்படி முத்திரை குத்துவதுதான் அவரது வேலையா?” என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மக்கள் மத்தியில் அச்ச உணர்வு நிலவி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த தமிழிசை, “திமுக அரசு விளம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் பாதுகாப்புக்குக் கொடுப்பதில்லை” என்று சாடினார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும், திருமாவளவன் போன்றவர்களின் விமர்சனங்கள் பாஜக-வின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

கோவையில் பாஜக-வினருக்கு எதிராக நடக்கும் அரசியல் அடக்குமுறைகளை இரும்புக்கரம் கொண்டு எதிர்கொள்வோம் என்றும் அவர் எச்சரித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.