குஷியோ குஷி…! தமிழகத்தில் அரையாண்டு லீவு முடிஞ்சதும் ஜனவரியில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
SeithiSolai Tamil December 30, 2025 06:48 PM

பள்ளி மாணவர்கள் தற்போது அரை ஆண்டுவிடுமுறையில் உள்ளனர். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி தொடங்கிய விடுமுறை, வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முடிவடைகிறது. 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் மீண்டும் திறக்கப்படும்.

இதோடு, புத்தாண்டு மற்றும் ஜனவரி மாதத்தில் மாணவர்களுக்கு சிறப்பான விடுமுறைகள் கிடைக்கின்றன. ஜனவரி 15-ஆம் தேதி முதல் தொடங்கி, பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், உழவர் தினம், ஞாயிறு விடுமுறை ஆகியவற்றைக் கொண்ட 4 நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை கிடைக்கும்.

பின்னர், குடியரசு தினத்தையொட்டி 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனால், ஜனவரி மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் விடுமுறை மாணவர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடும் அளவிற்கு கிடைக்கிறது.

மேலும், இந்த விடுமுறை அனைத்து அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு அதிக நாள்கள் விடுமுறை கிடைப்பதால், பொங்கல் பண்டிகை மற்றும் பிற முக்கிய நாள்களை குடும்பத்துடன் கொண்டாடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.