விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தை எதிர்நோக்கி அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது பாலகிருஷ்ணா படமான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் விஜயின் ஸ்டைலில் அந்தப் படம் எப்படி வரும் என ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜன நாயகன் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் குட் டச் பேட் டச் பற்றிய விஷயத்தை விளக்கும் படமாகத்தான் இருக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கூடவே மமிதா பைஜூ, பாபிதியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் போன்றோர் முக்கியமாக கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படம் ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக வெளியாக இருக்கின்றது.
சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பல பேர் கலந்து கொண்டனர். அதோடு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மிகப்பிரம்மாண்டமாக இந்த விழா நடைபெற்றது. கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் விழா நடத்தப்பட்டதாக ஒரு தகவல் இருக்கிறது.
இதுவரை எந்தவொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில் விழாவை முடித்து சென்னை திரும்பிய விஜய்க்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பை ரசிகர்கள் கொடுத்ததை பார்க்க முடிந்தது. அதில் தன்னுடைய காரில் ஏறும் போது கூட்ட நெரிசலில் விஜய் கீழே விழுந்ததையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் விமானத்தில் இருந்து சென்னை ஏர்போர்ட்டில் இறங்கும் போதும் ரசிகர்கள் அவரை வரவேற்க காத்திருந்தனர். அதில் ஒருவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க அதை வாங்கிக் கொண்ட விஜய் அந்த நபரை ஒரு முறை முறைத்து விட்டு போனதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
View this post on Instagram