நாட்டையே உலுக்கிய 41 பேர் உயிரிழப்பு விவகாரம்…! சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகும் விஜய்..? வெளியான பரபரப்பு தகவல்..!!
SeithiSolai Tamil December 30, 2025 06:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆதவ் அர்ஜூனா, என் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் விசாரணைக்கு டிசம்பர் 29ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சிபிஐ சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கை முன்னதாக உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நேற்று அவர்களிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக அவர்கள் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் காரணமாக ஜனவரி மாதத்தில் பொங்கலுக்கு பிறகு நடிகர் விஜய்யின் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கூடும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.