ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து அதன்பின் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறி ரசிகர்களிடம் பிரபலமானவர் மா.கா.பா ஆனந்த். குறிப்பாக விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாகவே பல நிகழ்ச்சிகளுக்கும் இவர்தான் தொகுப்பாளர். அது இது எது, சினிமா காரம் காபி, சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் இவர் தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.
வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை, மீசைய முறுக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், போலியான டீசலை தன் காருக்கு காருக்காக பயன்படுத்துவதில் மூன்று லட்சம் வரை செலவாகி விட்டதாக சமூகவலைதள பக்கங்களில் தெரிவித்திருக்கிறார் மா.கா.பா ஆனந்த்.
சென்னையில் ஏதோ ஒரு பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த டீசலை தனது காருக்காக போட்டிருக்கிறார். அதில் கார் பழுதாகி மூன்று லட்சம் வரை செலவாகிவிட்டது என்று அவர் கூறியிருக்கிறார். ‘டீசல் தண்ணீர் கலந்ததால கார் ரிப்பேர் ஆகி 3 லட்சம் வரை செலவாயிடுச்சு.. இதை ஆதாரத்தோடு நிரூபிச்சதும் ‘கோர்ட்டுக்கு போயிடாதீங்க.. 80 ஆயிரம் தருகிறோம் என என்கிட்ட பேரம் பேசுறாங்க.. உங்கள நம்பிதான் வருகிறோம். ஆனா இப்படி பண்ணா டீசலையும் இனி மக்களே தயாரிக்கணுமா?.. இந்த பங்க் மேல இந்த நம்பிக்கையே போச்சி’ என குமறியிருக்கிறார்.
இந்தியாவில் பல பெட்ரோல் பங்குகளிலும் டீசல் மட்டும் பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.