எடப்பாடியை முதல்வராக்க அண்ணாமலை பிரச்சாரம் செய்வாரா? 2026 தேர்தலில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பாரா?
WEBDUNIA TAMIL December 30, 2025 06:48 PM

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், "எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க அண்ணாமலை பிரச்சாரம் செய்வாரா?" என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்" என்று பகிரங்கமாக அண்ணாமலை அறிவித்தாலும் அண்ணாமலை மாநில தலைவர் பதவியிலிருந்து விலக எடப்பாடி தான் காரணம் என்பது பலரும் அறிந்த உண்மை.

தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்படுவது ஒரு தொண்டனின் பொறுப்பு" என்று நோக்கில் அண்ணாமலை என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா? அல்லது 2026 தேர்தலில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.