`பதவி வெறி கண்ணை மறைத்தால்... தகப்பன்கூட எதிரியாகத்தான் தெரிவார்!' - அன்புமணியைச் சாடும் சகோதரி மகன்
Vikatan December 30, 2025 06:48 PM

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தியின் மகனும், மாநில செயற்குழு உறுப்பினருமான சுகந்தன் பேசுகையில், "எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு. எனக்கு தமிழில் பிடித்த ஒரே வார்த்தை நன்றி உணர்வு. எனக்கு அரசியல் ஆசை எல்லாம் கிடையாது. இந்த மேடைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் தாத்தாவுக்காக வந்துள்ளேன். என் தம்பி முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுத்தார். இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்கிறார். `அடுப்பு பற்றவில்லை... நான்கு மாதங்கள்தான் கட்சியில் சேர்ந்து ஆகிறது' என்று பேசினார். இது ஒரு கேவலமான செயல்...

என் மாமா அன்புமணியிடம் ஒரு கேள்வி? அன்புமணி கட்சியில் சேர்ந்தது 2004 ஆம் ஆண்டு, அப்பொழுது இளைஞர் அணித் தலைவராக மாறினார். அதே ஆண்டில் ராஜ்ய சபா எம்.பி ஆனார். அதே ஆண்டில் மத்திய அமைச்சராக ஆனார். இது ஸ்பீடு இல்லையா... நீங்கள் ஒரே ஆண்டில் மத்திய அமைச்சராக ஆகலாம். என் தம்பி உழைத்து வந்தால் தவறா? அன்புமணி கட்சியில் சேர்ந்த ஒரே ஆண்டில் பல்வேறு பதவிகளைப் பெறலாம், என் தம்பி பெறக் கூடாதா? உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா... பதவி வெறி கண்ணை மறைத்துக் கொண்டால் பெற்ற தகப்பன்கூட எதிரியாகத்தான் தெரிவார். ராமதாஸ் எனக்கு தாத்தா மட்டும் அல்ல ஹீரோ" என்று பேசினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.