சமீபத்தில் நடிகர் விஜய் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் நெரிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
விஜய் தனது கையை பின்னால் கொண்டு சென்று பாதுகாவலருக்கு ரகசியமாகச் சைகை காட்டியதாகவும், அனுதாபத்தைப் பெறுவதற்காக அவரே தன்னைத் தள்ளிவிடச் சொன்னதாகவும் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் காணொளிகளைப் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த வீடியோவை உன்னிப்பாக கவனிக்கும் நெட்டிசன்கள் இதற்கு மாற்று கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்றா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா என்பது குறித்து இணையத்தில் விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.