இன்று திருச்சி செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
Top Tamil News January 02, 2026 01:48 PM

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று  (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் தொடங்கி வைத்து பேசுகிறார்.

இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் வரை சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு அது தொடர்பாக சென்னையில் இருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திருச்சிக்கு வந்து ஆலோசனை நடத்தினர். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.