மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ. 1,120 அதிகரிப்பு..!
WEBDUNIA TAMIL January 02, 2026 02:48 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து, மீண்டும் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற வரலாற்று சாதனையைத் தாண்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த விலை, இன்று காலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முதன்முறையாக ஒரு லட்சம் ரூபாயை கடந்த தங்கம் விலை, பின்னர் சற்று சரிந்து நேற்று ரூ. 99,520-க்கு விற்பனையானது. ஆனால், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 12,580-க்கும், ஒரு சவரன் ரூ. 1,00,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 4,000 அதிகரித்து, தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,60,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 260 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் உயருமா என்பதை உலகளாவிய வர்த்தக நகர்வுகளே தீர்மானிக்கும்.

Edited by Mahendran

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.