இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகக் கோப்பை நாயகனுமான கபில் தேவ், உஜ்ஜைன் நகரின் தெருக்களில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உஜ்ஜைனில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த கபில் தேவ், அங்குள்ள பிரீகஞ்ச் பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டு, தாமும் அவர்களுடன் இணைந்து விளையாட ஆர்வம் காட்டினார்.
எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி மிகச் சாதாரணமாக சிறுவர்களுடன் களமிறங்கிய அவர், லெக் சைட் திசையில் ஒரு சிறப்பான ஷாட்டை அடித்து தனது பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டார். பின்னர் அந்த மட்டையை அங்கிருந்த சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
ஒரு ஜாம்பவான் வீரர் எவ்வித பந்தாவும் இன்றி தெருக்களில் விளையாடிய இந்த எளிமையான செயல், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.