ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 24 பேர் பலி; 50 பேர் படுகாயம்..!
Seithipunal Tamil January 02, 2026 04:48 PM

ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உக்ரைன் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இதுவரை எந்த உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சூழலில் இன்று கெர்சான் பிராந்தியத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் ஒன்று கூடியிருந்தனர். அப்போது உக்ரைன் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இது கொடூர சம்பவம் தொடர்பாக கெர்சான்  பகுதி ஆளுநர் விளாடிமிர் சால்டோ கூறியதாவது: 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நமது எதிரிகள் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர். கருங்கடல் அருகேயுள்ள கோர்லி பகுதியில் இருந்த ஓட்டல் மற்றும் விடுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதும், 50 பேர் காயமடைந்துள்ளதும் முதல்கட்டமாக தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளதோடு, இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைன் அனுப்பிய 168 டிரான்களை தாக்கி அழித்ததாகவும் கூறியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.