தவெக கூட்டணியில் டிடிவி தினகரன் ஓகே? ஓபிஎஸ்-க்கு விஜய் மறுப்பா?
Webdunia Tamil January 02, 2026 04:48 PM

தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அரசியல் நகர்வுகள் தவெக-வை நோக்கியே இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய அரசியல் வட்டார தகவல்களின்படி, டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைப்பதில் தவெக தலைமை ஓரளவுக்கு சாதகமான போக்கை கொண்டிருப்பதாக தெரிகிறது. அதே சமயம், ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்ப்பதில் விஜய் தரப்பு சற்று தயக்கம் காட்டுவதாக பேசப்படுகிறது.

டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவருமே இன்னும் அதிகாரப்பூர்வமாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும், திரைமறைவு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.