தமிழில் மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய நிலையில், தற்போதுவரை கிட்டத்தட்ட 12 வரங்களை கடந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்சியானது முடிவிற்கு வரும் நிலையில், தொடர்ந்து பல்வேறு டாஸ்குகள் நடந்துவருகிறது. அதன் படி இந்த பிக் பாஸ் வீட்டில் தற்போது மொத்தமாக 9 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் சீசன் 9 போட்டியின் இருத்திகான் டிக்கெட் டூ பினாலேக்கான (Ticket to Finale) டாஸ்குகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபற்றுவந்தது. கடினமான டாஸ்குகளுடன், போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் முழு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர். அந்த விதத்தில் இன்று 2026 ஜனவரி 2ல் இந்த போட்டிக்கான கடைசி டாஸ்க் நடைபெற்றுவந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும், ஒரே காரில் உள்ளே அமர்ந்திருக்கும் படியான டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.
இதில் சபரி (Sabari), விக்கல்ஸ் விக்ரம் (Vikkals Vikram), சாண்ட்ரா (Sandra) போன்ற போட்டியாளர்கள் ஆரம்பத்திலே வெளியேறினார்கள். இந்நிலையில் இந்த போட்டியின் இறுதியாக அரோரா சின்க்ளேர் (Aurora Sinclair) டிக்கெட் டூ பினாலே டாஸ்கை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையாயத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பிக்பாஸில் பார்வதி – கம்ருதினால் எரிச்சலான போட்டியாளர்கள்… தகாத வார்த்தைகளால் சண்டை!
#AuroraSinclair 🔥🔥🔥🔥 https://t.co/73Aa2DtoKj
— Anbuselvam_84 (@anbuselvam8495)
இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது ஆரம்பத்திலிருந்தே மிகவும் கடுமையான விமர்சனங்களை பெற்றுவந்தது. அந்த வகையில் தற்போதுவரை கிட்டத்தட்ட 12 வாரங்களை கடந்துள்ளது. இன்னும் சில வாரத்தில் இந்நிகழ்ச்சியனது இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என்ற நிலையில், இந்த நிகழ்ச்சியின் இறுதிவரை யார் யார் இருப்பார் என ஒரு கணிப்பே இல்லாமல் இருக்கிறது என்றே கூறலாம்.
இதையும் படிங்க: 27 தியேட்டர்தான் கொடுத்தாங்க.. தமிழ் சினிமா சாகும்.. கொதித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
அந்த விதத்தில் திவ்யா, சபரி மற்றும் அரோரா என இவர்கள் 3வரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி 89 நாட்களை கடந்த நிலையில், இன்னும் 2 வாரத்தில் நிறைவடைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பணப்பெட்டி டாஸ்க்கும் நடைபெறும். அந்த டாஸ்கில் யாரை வெல்லப்போகிறார். இந்த் போட்டியாளர்களின் யார் இறுதிவரை செலபோகிறார்கள் என தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.