திருப்பத்தூர் அருகே முறையான மருத்துவும் படிக்காமல் காய்ச்சலுக்கு ஊசி போட்டு 20 நிமிடங்களில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை ராஜிகவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சக்திவேல்(34). இவர் அதே பகுதியில் வெல்டிங் கடையில் வேலை பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சக்திவேலுக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சக்திவேல் வீட்டிற்கு மருத்துவம் பார்ப்பதற்காக பார்த்திபன்(35)சென்று ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட 20 நிமிடங்கள் கழித்து சக்திவேல் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அவரது தாயார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், திருப்பத்தூர் சிவராஜ்பேட்டை பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் பார்த்திபன்(35) என்பவர் டயாலிசிஸ் டெக்னீசியன் படிப்பு முடித்துவிட்டு அரசு மருத்துவமனையிலும் வேலை பார்த்து வந்துள்ளார். அரசு மருத்துவமனையிலும் பல்வேறு குளறுபடியில் ஈடுபட்டதால் ஒரு வருடத்திற்கு முன்பு அரசு மருத்துவமனனை நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளனர். மேலும் சக்திவேல் புதுக்கோட்டை, சௌலூர், ராஜி கவுண்டர் வட்டம் உள்ளிட்ட குக் கிராமங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்த்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது. முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் காய்ச்சலுக்கு ஊசி போட்டு 20 நிமிடம் கழித்து வாலிபர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.