மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள கோலார் பகுதியில் வசித்து வருபவர் தீபேஷ் அங்கித். இவர் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தைத் திருடுவதற்குப் பதிலாக, பெண்களின் உள்ளாடைகளை (Undergarments) மட்டும் குறிவைத்துத் திருடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு வீட்டின் பால்கனி வழியாகத் திருட முயன்றபோது, அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே தீபேஷ் தப்பியோடிவிட்டான். ஆனால், அவசரத்தில அவன் தனது அடையாள அட்டையை (Identity Card) அங்கேயே தவறவிட்டுச் சென்றான்.
மறுநாள் அந்த அடையாள அட்டையை வைத்துப் போலீஸார் தீபேஷ் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு கண்ட காட்சி அதிகாரிகளையே முகம் சுளிக்க வைத்தது.
போலீஸார் உள்ளே சென்றபோது, தீபேஷ் தான் திருடிய பெண்களின் உள்ளாடைகளைத் தானே அணிந்துகொண்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.
விசாரணையில் அவனது மனநிலை சாதாரணமாக இல்லை எனத் தெரிகிறது. இது ‘ஃபெட்டிஷிசம்’ (Fetishism) எனப்படும் ஒரு வகை மனநலப் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக இது போன்ற திருட்டுச் சம்பவங்கள் நடந்தாலும், வெளியே சொல்ல வெட்கப்பட்டு யாரும் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். தற்போது திருடன் சிக்கியதால் அப்பகுதி பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர்.