மைதானத்தில் மோதிக்கொண்ட பொல்லார்டு – நசீம் ஷா… சர்வதேச டி20 லீக் இறுதிப்போட்டியில் அரங்கேறிய பரபரப்பு… வைரல் வீடியோ..!!!
SeithiSolai Tamil January 06, 2026 12:48 AM

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச 20 ஓவர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில், டெசர்ட் வைப்பர்ஸ் அணியிடம் எம்.ஐ எமிரேட்ஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையில், மைதானத்தில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் டெசர்ட் வைப்பர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

போட்டியின் போது எம்.ஐ எமிரேட்ஸ் கேப்டன் கீரன் பொல்லார்டுக்கும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நசீம் ஷாவின் சிறப்பான பந்துவீச்சால் நெருக்கடிக்கு உள்ளான பொல்லார்டு, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து அவரிடம் ஆக்ரோஷமாகப் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நசீம் ஷா இந்தப் போட்டியில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். இதேபோல் அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரிலும் பொல்லார்டு மற்றும் டூ பிளசிஸ் இடையே சுவாரஸ்யமான மோதல் அரங்கேறியது.

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, பந்துவீசத் தயாரான பொல்லார்டு, எதிரே இருந்த டூ பிளசிஸ் முன்கூட்டியே கோட்டை விட்டு வெளியேறியதைக் கண்டு பந்துவீசாமல் நின்று அவரை எச்சரித்தார். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு அதிரடியாக விளையாடிய பொல்லார்டு, வெறும் 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்து தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், பல்வேறு லீக் தொடர்களில் பொல்லார்டு காட்டி வரும் ஆக்ரோஷமும் ஆட்டமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.