உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 17 வயது சிறுமி மூன்று சிறுவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 16 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.
தப்பியோட முயன்ற அந்த மூன்று சிறுவர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிடிபட்ட மூன்று பேரும் சிறுவர்கள் என்பதால், அவர்கள் தற்போது நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.